தீபாவளி விருந்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
பல லட்சம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் சுமார் 5 நிமிடத்தில் 3.5 லட்சம் லைக்ஸ் பெற்ற பெரும் சாதனை படைத்துள்ளது.
மேலும் விஜய் திரை வாழக்கையில் மாஸ்டர் டீசர் தான் வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக லைக்ஸ் பெற்ற ஒரே படம் மாஸ்டர் தான்.
இதுமட்டுமின்றி உலகளவில் 5 நிமிடத்தில் அதிக லைக்ஸ் வாங்கி குவித்த டீசர் என்று மாஸ்டர் டீசர் கருதப்படுகிறது. இதனை தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.