Home International அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி! முதன் முறையாக ஒப்புக் கொண்ட டிரம்ப்: என்ன...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி! முதன் முறையாக ஒப்புக் கொண்ட டிரம்ப்: என்ன சொல்லியிருக்கர் பாருங்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என்று குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச்ச் சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் இவர் பொறுப்பேற்கவுள்ளார்.

இருப்பினும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளது.


மேலும், பைடன் வெற்றிபெற்றிருக்கிறார், ஆனால் அந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது. தவறுதலாக, மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளை வைத்துதான் பைடன் வெற்றிபெற்றதாகவும், மேலும் ஓட்டு எண்ணப்படும்போது எந்தவொரு வாக்காளர்களோ அல்லது பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்/

இதுவரை தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் அடம்பிடித்து வந்த டிரம்ப், இதன்மூலம் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -