Home Srilanka தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 2021 ஜனவரி 1 முதல் ரூ .1000 ஆக உயர்த்த முன்மொழிவு

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 2021 ஜனவரி 1 முதல் ரூ .1000 ஆக உயர்த்த முன்மொழிவு

mahinda rakapakse live2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது, நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது.

அதன்படி இது இலங்கையின் 75வது வரவு செலவுத் திட்டமாகும்.

1. நூற்றுக்கு 06 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பு

2. கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள சிறு வர்த்தகர்கள், தேசிய உற்பத்திக்கு பங்களிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும், இதன் மூலம் தற்போதைய இறக்குமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை மாற்ற முடியும்

3. வங்கி மற்றும் நிதி அமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும். வங்கிகள் புதிய நோக்குடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.

4.“அரசாங்க சேவை ஊக்குவிக்கப்பட வேண்டும், செலவைக் குறைக்க மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றோம். அரசாங்க ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியமைக்காக முன்னாள் அரசாங்கத்தை கண்டிக்கின்றோம்” – பிரதமர்

5. 8 சதவீத வற் வரியில் மாற்றம் இல்லை

6. 90 சதவீதமாக இருக்கும் தேசிய கடனை 70 சதவீதமாகக் குறைக்க வேண்டும்

7. வறுமையை ஒழிப்பதுடன், சமூக நல நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்

8. விவசாய, மீன்பிடி துறையில் அறவிடப்படும் வருமான வரி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு நீக்கப்படும்

9. வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்க வேண்டியதன் காரணமாக அரசாங்க திட்டங்கள் முடங்கியுள்ளன.

10. மாதத்துக்கு 2இலட்சம் 50ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும்

11. தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

12. தேசிய சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூர்த்தி வங்கிகள் ஊடாக பயனாளிகளுக்கு கணக்கைத் திறந்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் அந்தக் கணக்கில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

13. சமூர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம்

14. தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் முதலீடுக்கு கவனம். ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

15. மக்கள் பாதுகாப்பை மேம்பாட்டுத்துவதற்காக, மேலதிகமாக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

16. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வர்த்தக மையம் செயல்படுத்தப்பட உள்ளது.

17. தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு 8,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு

18 . கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.

19. பொலிஸ் சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு பொது பாதுகாப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ .2500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

20. கிராம தொலை தொடர்புத் திட்டத்தை முழு நாட்டுக்கும் விரிவுபடுத்த ரூ .15,000 மில்லியன் முதலீடு செய்யப்படுகிறது.

21. ஹோட்டல், சிறு வியாபார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கும் காப்பீடு திட்டம்.

22. கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம். அவர்களது போஷாக்கினை மேம்படுத்த நடவடிக்கை. திரிபோஷ உற்பத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

23. கர்ப்பிணிகளுக்கு மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக திரிபோஷா வழங்கப்படும்

24 தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை.

25.. கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

26. ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடீபீ) , ஜெய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற அரசாங்கம் எதிர்பார்க்கிறது

27. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு வலயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

28 .50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். முதலாளியின் பங்களிப்பு 0.25 சதவீதமாக இருக்கும்.

29. தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு தற்போது 100,000 ஆக உள்ளது, இது வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்.

(02:41PM) – தேநீர் விருந்துக்காக 30 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைப்பு

(03:21PM) – பிரதமரின் வரவு – செலவுத் திட்ட உரை மீண்டும் ஆரம்பம்

30. வெளிநாடுகளில் பணிபுரிந்த 45 ஆயிரம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

31. கொழும்பு, களுத்துறை, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய தொழில்நுட்பக் கல்லூரிகள்

32. சுற்றுலா தொடர்பான வணிகத்தில் உள்ளூர் நிறுவனங்களின் வரிகளைக் குறைக்க முன்மொழிவு

33. 2020 டிசெம்பர் 31க்கு முன்னர் பதிவுசெய்யும் உள்ளூர் நிறுவனங்களுக்கு 50 சதவீத வருமான வரி விலக்கு

34. கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

35. திறமையான தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், வேலைக்கு வெளிநாடு செல்வோருக்கு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

36. மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை

37. விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

38. நெல் உற்பத்திக்கான உரத்தை இலவசமாக வழங்கவும், மற்ற பயிர்களுக்கு ரூ .1500 ரூபாய் வீதம் வழங்க திட்டம்

39. சாகுபடி உதவி திட்டம் முன்மொழிவு

40. உள்ளூர் மீன்பிடி மேம்பாட்டுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

41.பால் பண்ணை அபிவிருத்திக்கு ரூ. 500,000 கடன் வழங்க முன்மொழிவு

42. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 2021 ஜனவரி 1 முதல் ரூ .1000 ஆக உயர்த்த முன்மொழிவு

43. வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த யோசனை

44. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை. இதற்காக 1000 பில்லியன் ஒதுக்கீடு

45. 2021-2022 ஆண்டுகளில் தடை இல்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கேரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும்

46 .2021-2023 க்கு இடையில் தேசிய மின்கட்டமைப்பில் 1000 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும்.

47. கொழும்பு மற்றும் களனிவெளி ரயில் பாதை விரிவாக்கத்துக்கு 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

48. புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை 1000 மெகாவோட்டாக அதிகரிக்க முன்மொழிவு

49. இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்.

50. கிராம மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் 10,000 சூரிய சக்தி மின் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

51. இரத்தினக்கல் ஏற்றுமதியில் மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு
52. உள்ளூர் விவசாய தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -