அரசியல் நடவடிக்கை குறித்த தனது தீர்மானத்தை விரைவில் அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் அலுவலக நிர்வாகிகளுடன் சென்னையில் அமைந்துள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இரு மணிநேர சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
சந்திப்பினையடுத்து வீடு திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே இதனைக் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் எனது கருத்தை நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். நிர்வாகிகள் தங்களது கருத்தை முன் வைத்தனர். அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். எனது முடிவுக்கு ரசிகர்கள் கட்டுப்படுவதாக உறுதி அளித்திருக்கின்றார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தனது முடிவை வெளியிடுவார் என்றும் அது தொடர்பான அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.