பொலிஸ் சேவையினை முன்னெடுத்து செல்லவும், தேசிய மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதாக பொலிஸ்மா அதிபர் பிரதமரிடம் வாக்குறுதி வழங்கினார். 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரட்ன நியமிக்கப்பட்டதன் பின்னர் நேற்றைய தினம் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சேவை குறித்து பிரதமர் பொலிஸ்மா அதிபரிடம் கலந்துரையாடினார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் மனித வள முகாமைத்துவம், புலனாய்வு ,பொதுமக்கள் பாதுகாப்பு, பொலிஸ் சேவை, பண சுத்திகரிப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு, மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஒழித்தல் உள்ளிட்ட கற்கை நெறிகளில் பட்டம் பெற்றுள்ளார்.