Home India அண்ணனிடம் ஆசிபெற்ற ரஜினி- அடுத்தக்கட்ட பணிகள் என்ன?

அண்ணனிடம் ஆசிபெற்ற ரஜினி- அடுத்தக்கட்ட பணிகள் என்ன?

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த 3ம் தேதி சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

பின்னர் புதிய நிர்வாகிகளையும் ரஜினி நியமித்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு ரஜினிகாந்த் சென்றுள்ளார். அங்கு தனது சகோதரர் சத்யநாராயணாவை சந்தித்து, கட்சி தொடங்குவதை முன்னிட்டு அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’’ என ட்வீட் செய்தார். பின்னர் கட்சி வேலைகள் தீவிரமாக நடைபெறுவதாக தெரிகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ரஜினி ஆசி பெற்றார். பெங்களூருவுக்கு சென்றுள்ள அவர், வரும் 14 ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்து புதுக்கட்சித் தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், வரும் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை பெங்களூருவில் உள்ள அண்ணன் சத்யநாராயணன் வீட்டில் கொண்டாட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, ஹைதராபாத்தில் நடைபெறும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 15ஆம் தேதி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.1607311336411 1607316881130000

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -