மஹர சிறைச்சாலை வன்முறையின்போது கொல்லப்பட்ட கைதிகளின் உடலங்களை தகனம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை சட்டமா அதிபரிடம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின்போது கொல்லப்ட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தமையால் அவர்களின் சடலங்களை தகனம் செய்யவேண்டும் என்று அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் அவர்களின் கொலைகள் தொடர்பில் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளமையால் தகனம் செய்யக்கூடாது என்று கைதிகளின் உரிமைகள் தொடர்பான அமைப்புக்கள் கோரிவருகின்றன.
மஹர சிறைச்சாலை வன்முறையில் 11 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதில் 6 பேரின் உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த உடலங்களுக்கு உரியவர்கள்- ஜா-எல வத்தளை, மினுவாங்கொட, அங்குருவந்தொட்ட, வெலிவேரிய மற்றும் எந்தரமுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
இந்தநிலையில் மஹர வன்முறை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.