Home India தொழிலதிபரிடம் மந்திர பல்பை விற்று மோசடி செய்த 3 பேர் கைது!

தொழிலதிபரிடம் மந்திர பல்பை விற்று மோசடி செய்த 3 பேர் கைது!

உத்தரபிரதேசத்தில் தொழிலதிபரிடம் மந்திர பல்பை விற்று மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் நிதேஷ் மல்ஹோத்ராவை அணுகிய சிலர் தங்களிடம் மந்திர பல்ப் இருப்பதாகவும், இதை வீட்டில் வைத்தால் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய மல்ஹோத்ரா அவர்களிடம் இருந்து காந்தங்கள் மூலம் எரியும் சிவப்பு நிற மந்திர பல்பை 9 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

மந்திர பல்பால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1607479083130206

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -