Home Sports நடராஜன் கையில் வெற்றி கோப்பைகளை கொடுத்த கோலி, பாண்டியா.. நடராஜனுக்கு புகழாரம்!

நடராஜன் கையில் வெற்றி கோப்பைகளை கொடுத்த கோலி, பாண்டியா.. நடராஜனுக்கு புகழாரம்!

சிட்னியில் நேற்று நடந்த T20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றாலும் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிப்பெற்று இருந்ததால் T20 தொடரை இந்தியா கைப்பற்றியது. ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதைப்பெற்றார்.

பரிசளிக்கும் விழாவில் தொடரின் வெற்றிக் கோப்பை கோலியிடம் வழங்கப்பட்டது. தொடர் நாயகனுக்கான கோப்பை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இருவருமே நம் தமிழக வீரர் நடராஜனை அழைத்து அவர் கைகளில் இரு கோப்பைகளையும் கொடுத்தனர். நடராஜனின் அபார பந்து வீச்சே முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற பக்க பலமாய் இருந்ததால், வெற்றி கோப்பைகளை அவர் கையில் கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

அது மட்டுமில்லாமல், நடராஜனுக்கு புகழாரம் சூட்டி பாண்டியா ட்விட் செய்துள்ளார். என்னைப்பொறுத்தவரைக்கும் நடராஜன் தான் இந்த தொடரின் நாயகன். கடினமான சூழல்களில் அவரது திறமையும் கடின உழைப்புமே பெரிய அளவில் பேசின. என்று தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

சேலம் சின்னப்பம் பட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவிற்கு வெற்றிகளை தேடி தந்த நம் தமிழ் நாட்டு நடராஜனுக்கு புகழ் மாலைகள் தேடி வந்த வண்ணம் இருக்கின்றன.1607437860130184

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -