பயங்கரவாத தடுப்பு பிரிவு இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான தகவல்களை அரச புலனாய்வு சேவைக்கு வழங்குவதற்கு தயாராகவே இருந்தது. எனினும் அதனை பெற்றுக்கொள்வதற்கு அரச புலனாய்வு பிரிவு தயக்கம் காட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா இதனை தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை காவல்துறைக்கு தகவல் வழங்குபவராக செயற்பட்ட நாமல் குமார என்பவரை தாம் தொடர்ந்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தியதாகவும் நாலக டி சில்வா தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் நாமல் குமார ஏன் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவுடன் விரோதத்தை கொண்டிருந்தார் என்பது தொடர்பாக தாம் அறியவேண்டி இருந்ததாகவும் நாலக்க டி சில்வா தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவுகளில் அவர் அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனா தொடர்பான கருத்துக்கள் செம்மைப்படுத்தப்பட்டு இருந்ததாக நாலக டி சில்வா தெரிவித்திருந்தார்.
இந்தக் குரல் பதிவுகள் வேண்டுமென்றே செம்மைப்படுத்தபட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் நாலக டி சில்வா சாட்சியம் வழங்கினார்.