கல்முனை சுகாதார பிராந்திய சேவைக்குற்பட்ட பகுதியான சம்மாந்துறையில் 80 வயதுடைய ஆணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் தெரியவருகையில்; கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா நோயாளியை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.