Home Srilanka தமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..?

தமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..?

தந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது.

இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை சிலவற்றை தெளிபடுத்துகின்றோம்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையானது யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களின் இணைப்பில் இருந்து வேட்பாளர் இணைப்புவரை தவறு செய்கின்றன.
கடந்த தேர்தல் காலங்களில் இருந்து இன்றுவரை தொடர் தோல்வியை சந்திக்கும் வேட்பாளர்களையும் மக்களால் அதிக தடவை தேர்தலில் அடைந்த வேட்பாளர்களையும் களமிறக்கியது.இதனாலேயே கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது எனும் காரணத்தையும் குறிப்பிடலாம்

மேலும் தமிழ்த் தேசிய ஜனநாயக கட்சியாக நாங்கள் இருக்கின்றோம் எனக் குறிப்பிடும் தலைமைகள் தங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்ட கட்சி முக்கியஸ்தர்களின் ஆலோசனை பெறாது தமக்கு சார்பான வேட்பாளர்களை நிறுத்துவதும் தன்னிச்சையாக முடிவெடுப்பதும் தவறானதாகும்…

இது மாத்திரமன்றி மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படவில்லை.தமிழ் அரசுக் கட்சியின் தலைமையானது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமக்கு விசுவாசமான உறுப்பினர்களை உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாக இருத்தி அழகு பார்த்ததே தவிர மக்கள் மனம் வென்றவர்களை இருக்கையில் அமர்த்தவில்லை ஏன்.? உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு கூட கசப்பாக இருக்கின்ற சபைத் தலைவர்கள் அமர்த்தப்பட்டனர். இதுவும் யாழ் மாநகர சபை இழப்புக்கும் நல்லூர் சபை இழப்புக்கும் காரணமாகின எனலாம்..!

யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவில் ஜனநாயகமற்ற வகையில் கட்சியின் தலைமை தாந்தோன்றித்தனாமாக யாழ் மாவட்டத்தின் தமிழ் அரசுக் கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கும் கருத்துக்கும் மாறாக செயல்பட்டது மட்டுமில்லாது யாழ் மாநகர சபையினால் பெரும்பாலும் உறுப்பினர்களால் விரும்பப்படாதவரை மீண்டும் கட்சி சார்பிலே முதல்வர் வேட்பாளர்களாக இறக்கியது ஜனநாயக பண்பாகுமா…?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பகிரங்கமாகவே ஆர்னோல்ட்டை தவிர வேறு யாரையும் வேட்பாளர்களாக இருத்தினால் ஆதரவு அளிக்க தயார் என அறிவித்து இருந்தார்.

அதனையும் பொறுட்படுத்தாது வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அதிக முறை தோற்ற ஒருவரை மீண்டும் மீண்டும் முதல்வராக்க எத்தணித்து இருந்ததும் இழந்தாய் போற்றி என போனது தமிழ் அரசுக் கட்சியின் யாழ் முதல்வர் கதிரை யாழில் இருந்து பங்காளி கட்சிகளோடு இழுபாட்டில் இருந்த மட்டு மாநகர சபையை மீண்டும் தமிழ் அரசுக் கட்சி வசம் வைத்திருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எம்.ஏ சுமந்திரன் அவர்களின் மூலமும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மூலமும் மட்டு மாநகரசபையை சுமூகப்படுத்திய இலங்கை தமிழ் அரசுக் கட்சியானது யாழ் மாநகர சபை முதல்வர் தொடர்பில் ஏற்பட்ட பிணக்கினை தீர்க்க குறைந்த பட்சம் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எண்ணத்திலாவது கருத்துக்களை உள்வாங்கி இருக்கலாம்.அவர்களின் கருத்தை உள்வாங்கவில்லை.

அவசரமாக கூட்டத்தை கூடியது மட்டுமல்லாமல் ஜனநாயக விரோத செயலாக மீண்டும் மீண்டும் தோற்கும் ஒருவரை முன்நிறுத்தி இன்று முதல்வர் ஆசனமும் பறிபோயுள்ளது இவ் குற்றச்சாட்டுகளை முன்நிறுத்தி அவரின் ஆட்சேபத்தை கடிதத்தின் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தார்.கட்சி தலைமையாகினும் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டக் குழு என்வற்றை தாண்டி சில முடிவுகளை மேற்கொள்வது கட்சியியை நேசிப்பவர்களை கட்சியை கட்டி வளர்க்க ஆர்வமுள்ளவர்களை பின்தள்ளும் செயலாகவும் சர்வாதிகாரப்போக்குள்ளதாகவும் புலப்படுகின்றது.
இதுவரை கட்சியின் பொதுச் செயலாளர் நியமிக்கப்படவில்லை

பொதுக் குழுவை கூட்டி தெரிவுகளை நடாத்த வேண்டும் கட்சியை கட்டமைக்க வேண்டும்

ஆனால் அவற்றை செய்யாமல் 13அ எனும் பிரிவின் அடிப்படையில் தலைவரின் அதிகாரம் எனும் தொனியில் உள்ளக நியமனங்கள் வழங்கப்படுகின்றதாம்.அதனடிப்படையில் கிழக்கில் மட்டு அம்பாறையை கட்சி சார்பில் நிர்வகிக்கும் பொறுப்பு திரு.பொன் செல்வராசா(நவம்)அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஏன் பிரதி பொதுச் செயலாளராக வைத்தியர் திரு.சத்தியலிங்கத்தின் நியமனமும் கூட எந்தவித கலந்தாலோசிப்புமின்றி செயல்பாட்டில் நடந்ததாக அறிய முடிகின்றது.

தந்தை செல்வா வளர்த்த கட்சியாக உலகநாடுகளில் சமஷ்டி கட்சியாக பார்க்கப்படுகின்ற கட்சி தலைமையின் தான்தோன்றிதனமான செயல்பாட்டினால் இன்று பாரிய பின்னடைவான நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றது.இவ்வாறான கட்டமைப்பு அற்ற நிலையை சீர் செய்ய வேண்டுமாயின் ஜனநாயகமிக்கதான செயலில் ஈடுபட கட்சி தலைமை சிந்திக்க வேண்டும் இல்லையேல் கட்சி தலைமை எனும் நிலையையும் இழந்து கட்சியையும் இழக்க நேரிடும் என்பதே யதார்த்தமான உண்மை

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -